மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

இயக்குநருடன் ஜோடி சேரும் பிரியா

இயக்குநருடன் ஜோடி சேரும்  பிரியா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாகப் பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா குஷி, நியூ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி இருந்தாலும் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இறவாக்காலம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா ஒருநாள் கூத்து படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாகப் பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018