ஐடியா - வோடஃபோன் இணைந்து சேவை!


ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் சேவை வழங்கவுள்ளன.
இந்தியாவின் தொலைத் தொடர்புச் சந்தையில் ஏர்டெலைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்து சேவை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாகவே இருந்து வந்த நிலையில், இவ்விரு நிறுவனங்கள் இணைந்து ஏப்ரல் மாதம் முதல் சேவை வழங்கவுள்ளன. இவ்விரு நிறுவனங்கள் இணைந்து புதிதாக உருவாகும் நிறுவனமானது உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும், இந்திய அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும் திகழும். 4 கோடி வாடிக்கையாளர்களுடன், இந்தியாவின் நெட்வொர்க் வாடிக்கையாளர் சந்தையில் 35 சதவிகிதப் பங்கையும், வருவாய் அடிப்படையில் 41 சதவிகித சந்தைப் பங்கையும் இப்புதிய நிறுவனம் கொண்டிருக்கும்.