மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

விரக்தியில் திமுக நிர்வாகிகள்!

விரக்தியில் திமுக நிர்வாகிகள்!

பொங்கல் விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்குப் புத்தாடை வழங்கி கை செலவுக்கு பணமும் கொடுக்கச்சொன்னார் தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் திமுக இதுபோன்ற ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குமுறல் திமுகவினரிடம் தென்படுகிறது.

அதிமுக, திமுக, தலைமைகள் தீபாவளி, பொங்கல் விழா நாட்களில் கட்சி நிர்வாகிகளை கவனித்துவருவது வழக்கமானதுதான். ஆனால் சமீபகாலமாக அதிமுக தொண்டர்களை அதிகமாக கவனிப்பதுபோல, திமுக தலைமை, தொண்டர்களை கவனிக்க மறந்துவிட்டது தற்போதைய செயல் தலைமை என்று வருத்தப்படுகிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

பொங்கல் விழாவை முன்னிட்டு அதிமுகவில் ஊராட்சி பொறுப்பாளர்கள், நகரம் பேரூராட்சி வார்டு பொறுப்பாளர்களுக்கு வேட்டி சட்டை, சேலையும் வழங்கி ஆயிரம் இரண்டாயிரம் எனப் பணமும் கொடுத்தார்கள். இதற்கான தொகையை தலைமை அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கியிருக்கிறது

திமுக தலைமை இதுபோன்று எதுவும் செய்யாத நிலையில்...திமுக எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரவர் தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளைப் பலமாக கவனித்துள்ளார்கள்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018