மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

‘ஹெச்டி’ செட்டாப் பாக்ஸ் அறிமுகம்!

‘ஹெச்டி’ செட்டாப் பாக்ஸ் அறிமுகம்!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் ‘பிரீபெய்டு’ திட்டத்துடன் கூடிய ‘ஹெச்டி’ செட்டாப் பாக்ஸ்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

`ஹெச்டி' தரம் கொண்ட செட்டாப் பாக்ஸ் தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ரூ.175க்கான 300 சேனல்கள் கொண்ட தொகுப்பையே விரும்பிப் பெற்றுள்ளனர். இந்தச் சேவையை மேம்படுத்தும் வகையில், இம்மாத இறுதியில் ‘ஹெச்டி’ இணைப்பைத் தர முடிவெடுத்துள்ளோம். இதன்படி ரூ.225க்கு 380 வழக்கமான சேனல்களுடன் 30 ஹெச்டி தர சேனல்களும் கிடைக்கும். இதற்கு வழக்கமான கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

அதே போல் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தும் ‘பிரீ பெய்டு’ முறையும் விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தால் சரிசெய்யவும், மாற்றித் தரவும் மாவட்டத்துக்கு ஒரு சேவை மையம் அமைத்துள்ளோம். வாடிக்கையாளர்கள் 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 17 ஜன 2018