மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

மீண்டு வந்த ஜோகோவிச்

மீண்டு வந்த ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் நவோக் ஜோகோவிச் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நவோக் ஜோகோவிச் நேற்று (டிசம்பர் 16) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடரின்போது காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகிய ஜோகோவிச் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்துவந்தார்.

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அபுதாபியில் நடைபெற்ற காட்சிப் போட்டியில் களமிறங்கிய ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். 6 மாத கால ஓய்விற்கு பின்னர் அவர் ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்கினார் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இந்தப் போட்டியைக் காண வருகை தந்திருந்தனர். அமெரிக்க வீரர் டொனால்ட் யங் உடன் மோதிய ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் நிலை வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் நவோக் ஜோகோவிச் கடந்த 6 மாத காலம் விளையாடாமல் இருந்ததால் 14ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். மீண்டும் வெற்றியுடன் களமிறங்கியுள்ள அவர் முதலிடம் பெற போராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 17 ஜன 2018