மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

மெரினா: காணாமல் போன குழந்தைகள் மீட்பு!

மெரினா: காணாமல் போன குழந்தைகள் மீட்பு!

சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன 50 குழந்தைகளை போலீஸார் நேற்று (ஜனவரி 16) மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் கொண்டாட்டமாக நேற்று காணும் பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் குடும்பத்துடனும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் பூங்கா, பொருட்காட்சி உட்படப் பல்வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம். அதன்படி, காணும் பொங்கலையொட்டி மெரினாவில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அலைமோதியது.

எனவே, பாதுகாப்புப் பணிகளுக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போனால், அவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் அவர்களின் கையில் வளையம் கட்டப்பட்டது. அதில், பெற்றோர் பெயர், முகவரி, செல்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 50 குழந்தைகள் காணாமல் போனார்கள். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தைகளைத் தேடி அலைந்தனர்.அதைத் தொடர்ந்து அவர்களின் கையில் கட்டியிருந்த வளையம் மூலம் போலீஸார் குழந்தைகளை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018