மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான ஏற்றுமதி டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதால் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 12.36 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் கணேஷ் குமார் குப்தா கூறுகையில், “டிசம்பர் மாதத்தில் 12.36 சதவிகித உயர்வுடன் 27.03 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் சரிவைச் சந்தித்த ஏற்றுமதி மீண்டும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 224 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. எனவே இந்த நிதியாண்டின் நிறைவில் ஏற்றுமதி மதிப்பு 300 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். மருந்து, ரத்தினக் கற்கள், நகைகள், ரசாயனம் ஆகியவற்றின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. அதேநேரம், இரும்புத் தாது மற்றும் எண்ணெய் வித்துகள் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 17 ஜன 2018