மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

உண்ணாவிரதம் தொடங்கினார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்!

உண்ணாவிரதம் தொடங்கினார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்!

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று (ஜனவரி 17) காலை தனது மடத்திலேயே உண்ணாவிரத்தைத் துவங்கி விட்டார் என்று வைணவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 15 ஆம் தேதி வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஜீயர்கள், வைணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்பாட்டம் நடந்தது.

இதில் பேசிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், ‘’தாயாரைப் பழித்த வைரமுத்து தாயார் சந்நிதிக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் புதன் கிழமை மாலைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்று அறிவித்திருந்தார்.

ஆனால் வைரமுத்துவிடம் இருந்து நேற்று மாலை வரை ஏதும் தகவல் இல்லை. இந்நிலையில் வைரமுத்துவை மன்னிப்பு கேட்க வைப்பதற்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மூலமாக வைணவ செயல்பாட்டாளர் திருக்கோட்டியூர் மாதவன் சில முயற்சிகள் எடுத்து வருவதையும் நாம் மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தான் அறிவித்தபடி இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது மடத்திலேயே இன்று காலை முதல் எளிமையாக உண்ணாவிரதத்தில் அமர்ந்துவிட்டார் என்று அம்மடத்தை மேற்கோள் காட்டி வைணவ வட்டாரத்தினர் தகவல் சொல்கிறார்கள்.

‘’செண்டலங்கார ஜீயர் உள்ளிட்ட பல பெரியவர்கள் உண்ணாவிரதம் வேண்டாம் என்று வற்புறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தான் அறிவித்தபடியே உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்துவிட்டார். அவரை கைவிடச் சொல்லி இன்னும் பல சிஷ்யர்களும் ஜீயர்களும் வற்புறுத்தியபடி இருக்கிறார்கள்’’ என்கிறார்கள் வைணவர்கள்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018