மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

செல்லப் பிராணிகளுடன் பேசலாம்!

செல்லப் பிராணிகளுடன் பேசலாம்!

நாய்கள் குரைப்பதை மனிதர்களுக்குப் புரியும் மொழியில் மாற்றித்தரும் புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

அரிசோனாவைச் சேர்ந்த நார்த்தன் அரிசோன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் கான் ஸ்லோபோட்சிச்சோஃப் என்பவர் கடந்த பத்து வருடங்களாகச் செல்லப் பிராணிகளின் உடல் மொழி, அதன் குரலொலி இரண்டையும் ஆராய்ந்துவருகிறார். அதில் கிடைத்த தகவல்கள் மட்டுமின்றி மேலும் பல ஆராய்ச்சியாளர்களின் தகவல்களை ஒன்றிணைத்துத் தற்போது புதுமையான செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

பெட் டிரான்ஸ்லேடர் (Pet Translator) என்றழைக்கப்படும் இந்த கருவியானது செல்லப் பிராணிகளான நாய்கள் குரைத்தல் அல்லது அதன் உடல் மொழிகளைக் கொண்டு அதன் உணர்வுகளை ஆங்கிலத்தில் மனிதர்களுக்குத் தகவல்களாக வழங்கும். உதாரணமாக எனக்கு பசிக்கிறது, நான் இப்போது வெளியே செல்ல வேண்டும் என்பன போன்ற தகவல்களைப் பயனர்களுக்கு வழங்கும் விதமாக இந்தப் புதிய கருவி கண்டறியப்பட உள்ளது.

2013ஆம் ஆண்டே இதற்கான பணிகளைத் தொடங்கிய கான் ஸ்லோபோட்சிச்சோஃப், 10 வருடங்களுக்குள் இந்தக் கருவியை முழுவதும் வடிவமைத்துவிட முடியும் என்ற தகவலைத் தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி அடுத்த வருடமே இந்தக் கருவியை முழுவதும் வடிவமைத்து முடித்துவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியின் சோதனை வெற்றிகரமாக நடைபெறும் பட்சத்தில் நாய்கள் மட்டுமின்றி பல்வேறு செல்லப் பிராணிகளுக்கும் இந்தக் கருவியைப் பயன்படுத்த முடியும் என கான் ஸ்லோபோட்சிச்சோஃப் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018