மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

மீண்டும் அதிமுக அம்மா! - தினகரன்

மீண்டும் அதிமுக அம்மா! - தினகரன்

அதிமுக அம்மா என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் தினகரன். கட்சியை பலப்படுத்துவதே தங்களது தற்போதைய நோக்கம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரான தினகரன், இன்று (ஜனவரி 17) நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக அம்மா என்ற பெயரை மீட்டெடுப்பதே, தங்களது முதல் குறிக்கோள் என்று தெரிவித்தார்.

"அதிமுக அம்மா என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம். நாங்கள் புதுக்கட்சி எதுவும் தொடங்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, எங்களது எண்ணங்களில் அதுவும் ஒன்றாக இருந்தது. ஆனால், அதிமுக அம்மா என்ற பெயரை மீட்டெடுப்பதே எங்களது முதல் குறிக்கோள்.

தேர்தல் ஆணையம் அந்தப் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்ததால், இதுவரை நாங்கள் அதனைப் பயன்படுத்தாமல் இருந்துவருகிறோம். தற்போது கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில், அந்தப் பெயரில் தொடர்ந்து இயங்க அனுமதி கேட்கவிருக்கிறோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், இப்போது அதிமுகவில் உள்ளவர்கள் எங்களோடு இணைவார்கள். விரைவில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்போம். தற்போது அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது, சட்டமன்றத்தில் எங்களது ஸ்லீப்பர் செல்கள் வெளியேறுவார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 17 ஜன 2018