மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

முன்னேறும் முனைப்புடன் இரு அணிகள்!

முன்னேறும் முனைப்புடன் இரு அணிகள்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று (ஜனவரி 17) நடைபெறவிருக்கும் போட்டியில் ஜம்ஷெட்பூர், கேரள அணிகள் மோதுகின்றன.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெறவிருக்கும் லீக் ஆட்டத்தில் ஜம்ஷெட்பூர் மற்றும் கேரள பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளனர். இதுவரை ஜம்ஷெட்பூர் அணி 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் கேரள அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் பெற்று 14 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கேரள அணி முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேற வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் ஜம்ஷெட்பூர் அணியும் அரையிறுதி வாய்ப்பைப் பெற முடியும். எனவே, இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடும் என்பதால் போட்டி மிகுந்த சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018