மாற்றுத் திறனாளி வேடத்தில் பூர்ணா


சவரக்கத்தி படத்தில் காது கேளாதவராக வரும் பூர்ணா, யதார்த்த வாழ்விலும் காது கேட்காமல் இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடைக்கானல், வேலூர் மாவட்டம், வினோதன், ஜன்னல் ஓரம், மணல் கயிறு 2 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூர்ணா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமாரின் 'கொடிவீரன்' படத்தில் வில்லி வேடம் ஏற்று நடித்திருந்தார். இப்போது மிஷ்கின் சகோதரர் ஆதித்யா இயக்கும் 'சவரக்கத்தி' படத்தில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும் நடித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பூர்ணா இப்பட அனுபவம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "சவரக்கத்தி படம் முழுக்க வருவேன். நான், மிஷ்கின், ராம் நாங்க மூவரும்தான் படத்தை ஆக்கிரமித்து இருப்போம். இரண்டு இயக்குநர்களோடு சேர்ந்து நடித்தது, ஒவ்வொரு நாளும் முதல் படத்தில் நடிக்கும்போது ஒருவித பதட்டமும், பயமும் இருக்குமே அந்த மாதிரிதான் இருந்தது. அறிமுக இயக்குநர் ஆதித்யா இயக்கத்தை மிக அழகாகக் கையாண்டு இந்தப் படத்தை தந்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.