மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

ராணுவக் கல்லூரி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனிலுள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில், ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 7ஆம் வகுப்பு படிப்பவர்கள் அல்லது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு எட்டாம் வகுப்புக்கான முதல் வகுப்புகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து , ராணுவ அதிகாரிக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். பின்னர் பணியில் சேர்க்கப்படுவர்.

அதன்படி, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று 11 வயது ஆறு மாதங்கள் நிரம்பி இருக்க வேண்டும். 13 வயதை அடையாதவராக இருக்க வேண்டும். அதாவது 2006 ஜனவரி 2ஆம் தேதிக்கு முன்னரும் 2007 ஜூலை 1ஆம் தேதிக்குப் பின்னரும் பிறந்திருக்கக் கூடாது.

பள்ளிக் கல்வி இயக்குநர் குமார், “ராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் நடைபெறும். ஜூன் 1ஆம் தேதி காலை 10 மணிமுதல் 12 மணிவரை ஆங்கிலத் தேர்வும், அன்று பிற்பகல் 2 மணிமுதல் 3.30 மணி வரை கணிதத் தேர்வும் நடைபெறும். ஜூன் 2ஆம் தேதி காலை 10 மணிமுதல் 11 மணிவரை பொது அறிவுத் தேர்வு நடைபெறும். கணிதம் மற்றும் பொது அறிவுத் தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். அக்டோபர் 4ஆம் தேதி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். புதுச்சேரி மாணவர்களுக்குத் தேர்வு மையம் குறித்த தகவல் இணை இயக்குநர் அலுவலக தேர்வு பிரிவால் தபால் மூலம் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை www.rimc.gov.in என்ற இணையதள முகவரியில் அல்லது தபால் மூலமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தைப் புதுவை அண்ணா நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள இணை இயக்குநர் அலுவலகத்துக்கு வருகிற மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018