மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

நண்பேன்டா: ‘தளபதிஸ்’ ரிட்டர்ன்!

நண்பேன்டா: ‘தளபதிஸ்’ ரிட்டர்ன்!

பின்னணிப் பாடகர்களான யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.

தமிழ், மலையாளம் திரையுலகில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் ஆகிய இருவரும் ஒன்றாக ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் இருவரும் சேர்ந்து பாடினர். அதன் பின்னர் இருவரும் இணைந்து எந்த பாடலும் பாடவில்லை. 27ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கேணி என்ற திரைப்படத்தில் எஸ்.பி.பி., யேசுதாஸ் ஆகிய இருவரும் பாட இருப்பதுடன், இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் குறித்து இதன் இயக்குநர் நிஷாந்த் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், “இரண்டு பெரிய ஜாம்பவான்களுடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் தமிழர்களுக்கும் மலையாளிகளுக்குமிடையே உள்ள சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் தயாரிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 17 ஜன 2018