எய்ம்ஸ்: தமிழக மாணவர் மர்ம மரணம்!


டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு பயின்று வந்த தமிழக மாணவர் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்த செல்வமணி-தனலட்சுமி தம்பதியின் மகன் சரத் பிரபு. இவர் கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் சரத் பிரபு இன்று காலை கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.