மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

தினகரனுக்குப் போட்டி இயக்கமா?

தினகரனுக்குப் போட்டி இயக்கமா?

நான் என்றைக்கும் தினகரனுக்கு கட்டுப்பட்டவன் என்று திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் விளக்கம் அளித்திருக்கிறார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் பொங்கலை முன்னிட்டு, மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் மக்கள் பணியகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் நமது சக்திக்கேற்ப தொண்டுகளையும் செய்ய இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் அறிவிக்கபட்டு அவர்களின் கருத்துகளை பரிமாறி கொள்ள தனியாக ஒரு சமூக தளம் உருவாக்கப்படும். அதில் மக்களின் எளிய வாழ்கையில் வரும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கு தீர்வுகாண கடும் முயற்சி எடுக்கப்படும். என்னை சந்திக்க வந்த அனைத்து இளைஞர்களும் நீங்கள் இதுவரை செய்து வந்த சமூக பணிகளையும் எங்களை நாங்கள் சரியாக ஈடுபடுத்தி கொள்ள ஒரு மைய புள்ளி இல்லை. அதனால் நாங்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் இருந்து பணியாற்றவும்,உங்களுடனும் உங்கள் ஆதரவாளர்களுடனும் கடைசிவரை தொடர்பில் இருக்கவும் பயன்படும்’’ என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார் ஜெய் ஆனந்த்.

இதையடுத்து இந்த இயக்கம் தினகரனுக்குப் போட்டியாக செயல்படப் போகிறது என்று தகவல்கள் பரவியது. ஏற்கனவே விவேக்கும் தினகரனும் முறைத்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், திவாகரன் மகன் தனி இயக்கம் காண்பது தினகரனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று செய்திகள் பரவின.

இந்நிலையில் இந்த தகவல்களுக்கு இன்று (ஜனவரி 17) தனது ஃபேஸ்புக் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார் ஜெய் ஆனந்த்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018