மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

ஜெ பிறந்தநாளில் ‘நமது அம்மா’ நாளிதழ்!

ஜெ பிறந்தநாளில்  ‘நமது அம்மா’ நாளிதழ்!

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் நமது அம்மா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி ஆகியவை சசிகலா வசம் சென்றன. தற்போது சசிகலா சிறையில் உள்ள நிலையில் அவரது அண்ணன் மகன் விவேக், இவற்றை நிர்வகித்துவருகிறார். அதிமுகவுக்கு எதிரான செய்திகளே இவற்றில் பிரதானமாக வரத் தொடங்கியதையடுத்து, அதிமுகவுக்கு அதிகாரபூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்கத் திட்டமிடப்பட்டது.

கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவுக்குப் பிரத்யேகமாகத் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு

'நமது அம்மா' எனப் பெயர் வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 17 ஜன 2018