பழைய ரூபாய் நோட்டுகள்: இருவர் கைது!

கான்பூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைப் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு வீட்டில் மதிப்பழிப்பு செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையின்போது ரூ.100 கோடி மதிப்பிலான மதிப்புழிப்பு செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைப் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கைப்பற்றப்பட்ட பணம் முழுமையாக எண்ணப்படவில்லை என்றும், எண்ணி முடிந்த பிறகே அதன் மதிப்பு தெரியவரும் என்றும் ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.