மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

ராணுவ கேன்டீனை மாற்றக் கூடாது!

ராணுவ கேன்டீனை மாற்றக் கூடாது!

‘நெல்லை பாளையங்கோட்டையில் இயங்கும் முன்னாள் ராணுவத்தினர் கேன்டீனை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது’ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கிவரும் ராணுவ கேன்டீனை வேறு இடத்துக்கு மாற்றப்போவதாகச் செய்திகள் வெளியாகிய நிலையில், இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று (ஜனவரி 16) அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர், “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகே கடந்த 25 ஆண்டுகளாக முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலக வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தற்போது பணியில் உள்ள ராணுவத்தினரின் குடும்பத்தினர் மாதந்தோறும் தங்களுக்கான ஒதுக்கீட்டின்படி குடும்ப உபயோகத்துக்கான பல்வேறு பொருள்களை வாங்கும் கேன்டீன் இயங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம், மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு பகுதி என சுமார் 8,000 குடும்பங்கள் மாதந்தோறும் இப்பொருள்கூடத்தைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்

தற்போதைய நிர்வாகம் இக்கேன்டீனை சற்றும் பொருத்தமில்லாத வகையில் சுமார் 8 கி.மீ. தூரமுள்ள சங்கர் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வளாகத்துக்கு மாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 05.01.2018 முதல் பொருள்கள் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018