அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு இல்லை!


சில்லறை விற்பனைத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் சந்தையில் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் நூடுல்ஸ், தேன், நெய், எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், பூஜை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரடியாகவும், தனது இணையதளம் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் பிரபல ஆன்லைன் விற்பனைத் தளங்கள் வாயிலாகத் தனது பொருட்களை விற்பனை செய்து இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு, அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம் மால், 1எம்.ஜி., பிக்பாஸ்கெட், குரோஃபெர்ஸ், ஷாப்குளூஸ் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய எட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறது.