மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

2018இல் 10 சதவிகித ஊதிய உயர்வு!

2018இல் 10 சதவிகித ஊதிய உயர்வு!

2018ஆம் ஆண்டில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் நிலைக்கேற்ப 10 சதவிகித ஊதிய உயர்வு இருக்குமென்று மெர்செர் ஆய்வறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் நிலைக்கேற்ப 10 சதவிகித ஊதிய உயர்வு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 52 சதவிகித நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் ஊதிய உயர்வு நடவடிக்கையை மேற்கொள்ளும். 48 சதவிகித நிறுவனங்கள் கடந்த ஆண்டிலேயே ஊதிய உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டும் ஊழியர்களின் சேவை மற்றும் கடந்த இரண்டாண்டு நிலையைக் கருத்தில்கொண்டு ஊதிய உயர்வை மேற்கொள்ளும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தொழில் தலைவரும் மெர்செர் அமைப்பின் தகவல் மற்றும் திறன்வாய்ந்த ஆலோசகருமான சாந்தி நரேஷ் கூறுகையில், “இரட்டிப்பு வளர்ச்சிக்குக் குறைவான வளர்ச்சியிலேயே இந்திய தொழில் நிறுவனங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதில் இந்தியாவின் பொருளாதாரச் சூழல் முக்கிய பங்காற்றுகிறது. புதிய திட்டமிடல், பகுப்பாய்வு, தேவைக்கேற்ற திட்டம், கணினி படங்கள், கடைகள் வடிவமைப்பு போன்றவற்றை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 17 ஜன 2018