மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

புதிய கட்சியா: தினகரன் விளக்கம்!

புதிய கட்சியா: தினகரன் விளக்கம்!

‘புதிய கட்சி தொடங்குவதாக நான் எதுவும் கூறவில்லை’ என்று ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் எடப்பாடி - பன்னீர் அணிக்குக் கிடைத்த நிலையில், கட்சியும் சின்னமும் அணிகள் வசமானது. இதனால் ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வெற்றி கொண்டார். மேலும் கட்சி, எடப்பாடி அணிக்கு சென்ற நிலையில், புதிய கட்சியோ அல்லது பேரவையோ தொடங்க தினகரன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

இதை உறுதிப்படுத்தும்விதமாக நேற்று காலை உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அதிமுகவின் 90 சதவிகிதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் நிலையில், நாங்கள் பெயரில்லாமல் செயல்பட முடியாது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கைக் குறித்து எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் முடிவு செய்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 16) கோவை அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர், “புதிய கட்சி தொடங்குவது குறித்து, நாளை (இன்று) அறிவிப்பதாக நான் எதுவும் சொல்லவில்லை. தொலைக்காட்சிகளில்தான் அப்படி விவாதம் நடைபெற்றது” என்று பதிலளித்துள்ளார்.

மேலும் அவர், “கட்சியைத் துரோகிகளின் கையில் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. 90 சதவிகிதத் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்கள் பக்கம் இருப்பதால்தான், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றேன். உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கட்சியை எப்படி கொண்டு போக வேண்டும் என்பதற்காக மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, அடுத்த கட்ட நகர்வு குறித்து அறிவிப்போம்” என்றும் கூறினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 17 ஜன 2018