மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தரும் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும்விதமாக ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலத்தின் புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியின் அரங்கு எண் 379இல் இடம்பெற்றுள்ளன.

நாளுக்கு நாள் நமது அரங்கை நாடிவரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக நமது செய்திகளை, கட்டுரைகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களோடு மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என ஏராளமான புதிய வாசகர்களும் மின்னம்பலம் பற்றி இதன் செயல்பாடுகள் பற்றி கேட்டறிகின்றனர். பல்வேறு தலைப்புகளில் கருத்து செறிவுமிக்க கட்டுரைகளை ஒரே இடத்தில் பார்க்கும்போது அவர்கள் அடையும் ஆச்சர்யத்தைக் கண்கூடாக பார்க்க முடிகிறது.

வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் ஸ்மார்ட்போன் பரிசு திட்டத்தில் பங்குபெற வாசகர்கள் மின்னம்பலம் அரங்குக்கு வருகை தருவதே போதுமானது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற குலுக்கலில் திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அ.அஜ்மல் கான் MI 5A மாடல் ஸ்மார்ட்போனைத் தட்டிச்சென்றார். வேளச்சேரி சாய் தினேஷ் கன்ஷ்ட்ரக்ஷன் உரிமையாளர் மணிமாறன் அவருக்குப் பரிசை வழங்கி சிறப்பித்தார். இன்றைய குலுக்கலில் வெல்வது நீங்களாகவும் இருக்கலாம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 17 ஜன 2018