மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

வள்ளுவர் பிறந்தது வைகாசி அனுஷம்.

ஆதாரத்தோட பல பேர் சொல்கிறார்கள்.

அந்த நாள் பல தெய்விகப் புருஷர்கள் அவதார தினம்.

அட அறிவு ஜீவிகளா.. இத எப்ப கிளப்பிவிட்டீங்க? அவரோட முகமே ஒரிஜினல் கிடையாது. ஒரு கற்பனை வடிவம்தான் திருவள்ளுவர். இப்படி இருக்கலாம்னு ஒரு யூகம்தான்.

அடுத்ததா, ‘வள்ளுவன் வாசுகி தம்பதியாக இருக்கும் அரிய புகைப்படம்’னு போட்டோ ஒண்ணு ஆறு மாசமா உலாவுது. ‘வள்ளுவர் காலத்துல கேமராவே கண்டுபிடிக்கலடா’னு சொன்னா, ‘சேட்டிலைட் பிக்சர்... மேல இருந்து 500 வருஷத்துக்கு ஒருமுறை விழும்’னு நமக்கே பதில் சொல்றாங்க. திருத்த முடியும்னு நெனக்கிறீங்க?

இப்ப அவரோட நட்சத்திரச் சொல்லி கிளப்பிவிட்டு, கோயில் கட்டி, பிறந்த நாள்ல இதெல்லாம் செஞ்சா... இதெல்லாம் நடக்கும், கிடைக்கும்னு காசாக்கி சம்பாதிக்கணும். அதான் ஒரு பக்கா ப்ளான்.

இப்படி புரளியைக் கிளப்பிவிடறோமே... வரலாறு மக்களுக்கு, அடுத்து வர சந்ததியினருக்கு தவறா போய் சேராதான்னு கொஞ்சம்கூட கவலையே இல்லாம நம்ம மக்களும் ஃபார்வேர்டு பண்ணி அடிச்சி தூள் கிளப்புறாங்க.

அடுத்ததா, “சிங்கத்துக்கு ஏண்டா மாட்டுப்பொங்கல் வாழ்த்து சொன்னீங்க”னு ஒரு மொக்கைய காமெடின்னு நெனச்சி எல்லாரும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸா வைக்கிறாங்க

ஆக மொத்தத்துல மனுஷனே இல்லைங்கறதை ஒப்புக்கிறாங்க போல.

சரி விடுங்க...

நோய்கள் இலவசமாக வருகின்றன.

மருந்தைத் தான் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

இந்தக் கருத்து, நல்ல கருத்துதான். வடக்குப்பட்டி ராமசாமில இருந்து, ஆட்டையாம்பட்டி ஆறுமுகம் வரைக்கும் தானே எழுதியதா பேர் போட்டு அதே மெசேஜை மூணு நாள் திரும்ப திரும்ப வந்துகிட்டு இருக்கு.

சொல்ல வந்த விஷயத்தை தன்னோட பேரை மாத்தி, தான் போட்டதா சொல்றதுல இருக்க கவனம், என்ன சொன்னோமோ அதைக் கடைப்பிடிக்கிறதுல இல்ல.

நோய்கள் இலவசமா வருதுன்னா.. அதற்கு முன்னெச்சரிக்கையா ஆரோக்கியமா இருக்கோமா... அதையெல்லாம் கொஞ்சமாவது கடைப்பிடிக்கிறோமான்னா இல்ல...

நமக்கு தேவை... இன்னிக்கு ஒரு மெசேஜை எல்லாருக்கும் ஃபார்வேர்டு பண்ணணும்.

வெளில ஜல்லிக்கட்டு பேனர்,

போன்ல காளை மாட்டைப் போட்டு தமிழனா இருந்தா ஷேர் செய்யவும். மாட்டு படங்கள் மட்டும் 1800ஐ தாண்டிக்கிட்டு இருக்கு.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 17 ஜன 2018