மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

பிரிட்டன் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

பிரிட்டன் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் முடிவை பிரிட்டன் நாடு திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதியன்று, பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அந்த நாடு ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டுமென்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 51.8 சதவிகித பிரிட்டன் மக்கள் இந்த முடிவை ஆதரித்தனர். இதனால், பெரும்பான்மையானவர்களின் முடிவைக் கருத்தில்கொண்டு, இதை நிறைவேற்றும் முயற்சிகள் ஆரம்பமானது. தற்போது பிரிட்டன் பிரதமராக இருந்துவரும் தெரசா மே, வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், நேற்று (ஜனவரி 16) பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்போர்க் நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க், “உங்களுக்காக, எங்களது இதயம் இன்னும் திறந்தே இருக்கிறது” என்று பிரிட்டனைப் பார்த்து குறிப்பிட்டுள்ளார்.

“விலக வேண்டுமென்ற முடிவில் பிரிட்டன் உறுதியாக இருந்தால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பல எதிர்மறை விளைவுகளுடன் அது நிகழக்கூடும் என்பதே உண்மை. அதற்குள், நமது பிரிட்டன் நண்பர்களின் மனங்களில் மாற்றம் வரலாம். நாங்கள், இந்த கண்டத்தில்தான் தொடர்கிறோம்; எங்கள் இதயத்தை மாற்றிக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018