மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்!

அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்!

ஒற்றை பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய முதலீடு என்ற திட்டத்தால் அமைப்பு சார்ந்த சில்லறை வர்த்தகச் சந்தையின் மதிப்பு அடுத்த மூன்றாண்டுகளில் 300 அடிப்படை புள்ளிகளைப் பெறும் என்று கிரிசில் ஆய்வு கூறியுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “2020ஆம் நிதியாண்டில் இந்திய அமைப்பு சார்ந்த சில்லறை வர்த்தகச் சந்தை 10 சதவிகிதம் வளர்ச்சியைடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இத்துறையின் வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதமாக இருந்தது. அழகுசாதனப் பொருள்கள், ஆடம்பரப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், காலணிகள் மற்றும் மின்னணுப் பொருள்கள் ஆகிய துறைகள் இந்தப் புதிய திட்டத்தால் பயன்பெறும்.

அதேபோல வர்த்தகர்களின் கடன் மதிப்பும் உயர்ந்துள்ளது. 93 அமைப்பு சார்ந்த வர்த்தகர்களிடம் நடத்திய ஆய்வில் இந்நிறுவனங்களின் கடன் மதிப்பு அதிகரித்து கடன் விகிதாச்சாரமும் அதிகரித்துள்ளது. கடந்த நான்காண்டுகளில் ஒரு மடங்கு கடன் விகிதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்தப் புதிய விதியால் வெளிநாட்டு நிறுவனங்களின் வரவு அதிகரிப்பதுடன் உள்ளூர் நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியையும் இது ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 17 ஜன 2018