மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

ஆந்திரப் பிரதேச அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க சீனாவைச் சேர்ந்த முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் ஆந்திராவில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகளை அலிபாபா நிறுவனம் இளைஞர்களுக்கு அளிக்கிறது.

இதுகுறித்து ஆந்திரப்பிரதேச அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திரப்பிரதேச மாநிலத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் நர லோகேஷ், சுற்றுலாத் துறை அமைச்சர் அகிலா பிரியா ஆகியோர் அலிபாபா நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை (ஜனவரி 13) பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்படி ஆந்திராவில் உள்ள சுமார் 20,000க்கும் அதிகமான இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018