மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: சமையல் குறிப்புகள்!

கிச்சன் கீர்த்தனா: சமையல் குறிப்புகள்!

பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் பச்சை மிளகாயுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, இறுக மூடி வைத்தால் நீண்ட நாள்களுக்குப் பழுக்காமல் இருக்கும்.

முள்ளங்கி, காலிஃப்ளவர் போன்ற காய்களில் உள்ள இலைகளைப் பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சுவையாக இருக்கும். சூப் செய்தும் சாப்பிடலாம்.

பிஸ்கட்டுகள் நமர்த்துப்போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரைப் போட்டு மூட்டைபோல் கட்டி, பிஸ்கட் இருக்கும் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது, அதனுடன் வேகவைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக்கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

பால் பவுடரைச் சற்று வெதுவெதுப்பான நீர் விட்டுக் குழைத்து, நான்கு வித பழங்களை நறுக்கி, இத்துடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்தால் சுவையான மில்க் ஃப்ரூட் சாலட் தயார்.

ரவா உப்புமா மிகுந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவை கலந்து வடை போன்று தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் ருசியாக இருக்கும்.

சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் பீட்ரூட்டைப் பிழிந்து அதன் சாற்றை எடுத்து தடவினால் விரைவில் குணமாகும்.

புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் வராது.

கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம்பருப்புச் சேர்த்து தாளிப்பதற்கு பதிலாக நிலக்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

ஆரஞ்சு பழத்தோலைப் பொடியாக நறுக்கி, அதனுடன் பச்சை மிளகாய் வதக்கி வத்தல் குழம்பில் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

பொட்டுக்கடலை துவையல் செய்யும்போது இஞ்சிக்குப் பதில் பூண்டு சேர்த்து அரைத்து, அதனுடன் கொத்தமல்லி, சிறிது புளி அல்லது எலுமிச்சை சேர்த்து அரைத்தால் துவையல் ருசியாக இருக்கும்.

கீர்த்தனா சிந்தனைகள்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 16 ஜன 2018