மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

என்கவுண்டரில் கொல்லச் சதி: தொகாடியா குற்றச்சாட்டு!

என்கவுண்டரில் கொல்லச் சதி: தொகாடியா குற்றச்சாட்டு!

போலி என்கவுண்டரில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகச் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா.

ராஜஸ்தான் மாநிலத்தில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக, கடந்த 2002ஆம் ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கில் இவரைக் கைது செய்வதற்காக, நேற்று முன்தினம் ராஜஸ்தான் போலீசார் குஜராத் சென்றனர். அவரது வீட்டிற்கு போலீசார் சென்றபோது, அங்கு அவர் இல்லை. இதனால், அவர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியானது.

இதனையடுத்து, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளில் விஹெச்பி தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று (ஜனவரி 15) மதியம் அகமதாபாத் நகருக்கு அருகில் சுயநினைவற்ற நிலையில் தொகாடியா மீட்கப்பட்டார். அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சிகிச்சையிலிருந்த தொகாடியா, இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, விமான நிலையம் செல்லும் வழியில் தான் மயக்கடைந்ததாகக் கூறினார்.

”நேற்று காலை எனது அலுவலகத்தில் பூஜை செய்துகொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு நபர், என்னை என்கவுண்டரில் கொல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். விவசாயிகளுக்கு ஆதரவாகத் தற்போது நான் குரல் கொடுத்துவருகிறேன். அதனால், என்னுடைய குரலை நசுக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. என்னைக் கொல்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதை, ஒருவரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டேன்” என்று கண்ணீருடனும் கலக்கத்துடனும் தெரிவித்தார் தொகாடியா.

மருத்துவர்களின் அனுமதியுடன், விரைவில் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாவும் கூறினார். “என்னை என்கவுண்டரில் கொல்லத் திட்டமிட்டவர்களின் பெயர்களை சரியான சமயத்தில் வெளியிடுவேன்” என்றார் பிரவீன் தொகாடியா.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018