மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

நடராஜனுக்கு எச்சரிக்கை!

நடராஜனுக்கு எச்சரிக்கை!

அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை நடராஜன் தொட்டுபார்க்கிறார் என்றும் அதனுடைய விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார். குறிப்பாக, "நானும் எனது மனைவி சசிகலாவும் வருகிற ஜூன் மாதத்தில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ளோம்” என்றார்.மேலும், 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த இலவச திட்டங்களை உருவாக்கியது அவர் தான் என்றும் தான் எழுதிக் கொடுப்பதை ஜெயலலிதா அப்படியே பின்பற்றுவார். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாவை தூக்கிவிட்டது தாங்கள் தான் என்றும் கூறியிருந்தார். இதற்கு ஆளுங்கட்சியிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று (ஜனவரி 16) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, "ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை நடராஜன் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தக் கட்சிக்கு தொடர்பில்லாத ஒருவர் எதோ தான் தான் இந்த கட்சியை வழிநடத்துவது போல பேசிவருகிறார். மிகப்பெரிய அளவில் தவறான கருத்துகளை சொல்லிவருகிறார். இதை தொடர்வார் என்றால் நிச்சயமாக எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும், இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று ஒன்னரை கோடி தொண்டர்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஜெயலலிதா தான் கொடுத்த கடிதங்களின் அடிப்படையில் தான் செயல்பட்டார் என்று கூறி அதிமுக தொண்டர்களின் உணர்வை தொட்டுப் பார்க்கிறார். இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளார். .

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 16 ஜன 2018