மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

தங்கம் இறக்குமதிக்கு வரி குறைப்பு!

தங்கம் இறக்குமதிக்கு வரி குறைப்பு!

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தங்க நகைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் தங்கம் இறக்குமதிக்கான வரி குறைக்க முயற்சிக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தங்க நகைகள் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சில் (GJEPC) தங்கம் இறக்குமதிக்கான வரியை 10 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைக்க வேண்டுமென மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய நகை ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்தக் கோரிக்கை மத்திய அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "தங்கம் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டுமென நாங்களும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தியா தங்க நகைப் பயன்பாட்டில் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. தங்க நகைகள் ஏற்றுமதியில் மிகப்பெரிய நாடாக உருவெடுக்க வேண்டும். எனவே நடப்பு பட்ஜெட்டில் தங்க நகைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதி வரியைக் குறைக்க முயற்சிக்கப்படும்" என்றார்.

இந்தியா தற்போது இறக்குமதி செய்யும் தங்கத்தில் 80 சதவிகிதம் நகைகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு அண்மையில் பேசுகையில், "நகைகள் மற்றும் ரத்தினங்கள் துறை ஏற்றுமதியை ஊக்குவித்து வேலைவாய்ப்பினை இத்துறையில் அதிகரிக்கப்படும்" என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 16 ஜன 2018