மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்!

சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்!

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

காணும் பொங்கல் இன்று(ஜனவரி 16) கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா போன்ற இடங்களில் மக்களின் வருகை அதிகரித்திருந்தது. மெரினாவில் பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடற்கரையில் சவுக்கு கட்டை மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கடலில் மாட்டிக்கொள்பவர்களை மீட்பதற்காக நீச்சல் தெரிந்த இளைஞர்களும் ஆங்காங்க நிறுத்தப்பட்டிருந்தனர். ரோந்து வாகனங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கா ணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க அவர்களின் கைகளில் வளையம் ஒன்று பொருத்தப்பட்டது. அதில் பெற்றோர்கள், போலீசாரின் செல்போன் எண்கள் எழுதப்பட்டன.

மாயமான நிலையில் தனியாக தவித்த குழந்தைகள் இந்த போன் நம்பர் மூலமாகப் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டனர். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களிலும் கூட்டம் அலை மோதியது. 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிண்டி சிறுவர் பூங்காவில் பொதுமக்களின் வசதிக்காகக் கூடுதலாக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. பூங்காவில் காலையிலேயே பொது மக்கள் கூடினர். அங்கிருந்த பறவைகள் விலங்குகள் ஆகியவற்றைக் கண்டுகளித்து சிறுவர்களும், பெரியவர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பூங்காவினுள் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்டவற்றில் சிறுவர்- சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள பாம்பு பண்ணையிலும் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றையும் பூங்கா நிர்வாகம் செய்திருந்தது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணிக்கே 1 மணி நேரத்துக்கு முன்பாக திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அங்கு 30 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. சென்னை புத்தக கண்காட்சி, தீவுத்திடல், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்திருந்தது.

கன்னியாகுமரி, மேட்டூர் அணை, பிச்சாவரம், உதகை, கொடைக்கானல் எனத் தமிழகத்தின் பிற சுற்றுலா பகுதிகளிலும் மக்கள் அதிகளவு கூடினர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 16 ஜன 2018