மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

கடிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது!

கடிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது!

மதுசூதனன் கடிதம் தொடர்பாக அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியாக இருந்தும்கூட மதுசூதனனால் வெற்றி பெற முடியவில்லை. கட்சியினர் சரியாக வேலை பார்க்காததால்தான் தோல்வியடைந்ததாகக் கூறி மதுசூதனன், கடந்த வாரம் முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு தன்னுடைய தோல்விக்கு என்ன பதில் என்று கூறி கடிதம் எழுதினார். அதில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த ஜெயக்குமார், மதுசூதனன் கடிதத்தில் என்னுடைய பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படிக் குறிப்பிட்டிருந்தாலும் அது எங்களுடைய குடும்பப் பிரச்னை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், "மதுசூதனன் கடிதம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மதுசூதனனும் அதற்கு உரிய பதிலைத் தந்துள்ளார்"என்று தெரிவித்தார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018