மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

முன் கோபமா... முகச் சுருக்கமா? எது வேண்டும்?

அதிகமாகக் கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கோபப்படுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதற்குக் காரணம் ‘பாஸ்ட் ஃபுட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகிறது.

இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விஷயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்துபோவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்காக...

காய்கறி, பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள வைட்டமின் மற்றும் சத்துகள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.

ஒரு டீஸ்பூன் முட்டைக்கோஸ் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிடவும். நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.

முகச்சுருக்கம் நீங்க பார்லர்களில் செய்யப்படும் டைட்டனிக் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஆக்ஸிஜன் கலந்த நைட் க்ரீமை வாங்கி, தினமும் தூங்கப்போவதற்கு முன் தடவிக் கொள்ளலாம்.

வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.

துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

கறிவேப்பிலையிலுள்ள வைட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்கவைத்துக் கொள்ள பெரிதும் உதவும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 16 ஜன 2018