மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

தினேஷ் கார்த்திக்குக் கிடைத்த வாய்ப்பு!

தினேஷ் கார்த்திக்குக் கிடைத்த வாய்ப்பு!

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றிக்காகப் போரடிவருகிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பார்த்திவ் படேல் விளையாடிவருகிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள பார்த்திவ் படேல் முதல் இன்னிங்ஸில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு தேவை என்பதால் தினேஷ் கார்த்திக் பெயர் மூன்றாவது போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. சாஹா மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்பதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018