மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

தனிக்கட்சி: நாளை முடிவு!

தனிக்கட்சி: நாளை முடிவு!

தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவெடுக்க உள்ளதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற வழக்கிலும் எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்ததால், கட்சியும், சின்னமும் அணிகள் தரப்புக்கே சென்றது. இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கட்சி எடப்பாடி கைக்கு சென்றுவிட்டதால், தினகரன் தனிக்கட்சியோ அல்லது பேரவையோ ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று (ஜனவரி 16) விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "இரண்டு மாதங்களில் இந்த மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும். அவர்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்களை மட்டும் காட்டி மனுக்களைத் தாக்கல் செய்து சின்னத்தைப் பெற்றுவிட்டனர். ஆனால் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது தெரியாமல் சின்னத்தைக் கொடுத்தது தவறு என்று தேர்தல் ஆணையத்திற்கு ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் உணர்த்திவிட்டது" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்வோம். கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆனால் அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் வரவுள்ளன. மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர் எங்களுடன் இருக்கும் காரணத்தால் நாங்கள் பெயரில்லாமல் செயல்பட முடியாது. இதுகுறித்து பொதுச்செயலாளர் சசிகலாவிடம் ஏற்கனவே பேசிவிட்டேன், அவரும் உனக்கு எது சரியெனப் படுகிறதோ அதனைச் செய் என்று கூறிவிட்டார். எனவே நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளேன். அது என்ன என்பது குறித்து நாளைதான் முடிவு செய்வோம்" என்று கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 16 ஜன 2018