மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!

இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாப்வா நியூ கூனி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாப்வா நியூ கூனி அணி வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். தொடக்க வீரர்கள், சிமன் 13 ரன்களும் இகோ மகுரு 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ஓவிய சாம் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் வகி கரஹோ (6), சின்கா (12), கெவு டவ் (2) அனைவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்ததனர். அதன் பின்னர் களமிறங்கிய 3 வீரர்கள் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்ததால் பாப்வா நியூ கூனி அணி 64 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாகப் பந்து வீசிய இந்திய வீரர் அங்குள் சுதாகர் ராய் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 16 ஜன 2018