மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

ஏலக்காய் வரத்து சரிவு!

ஏலக்காய் வரத்து சரிவு!

பொங்கல் பண்டிகைக்கு முன்பான விற்பனை முடிந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு வரத்து குறைந்து சிறிய ஏலக்காய் விலை நிலையாகியுள்ளது.

போடிநாயக்கனூரில் ஏலக்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக நேற்று (ஜனவரி 15) நடந்த ஏலத்தில் ஏலக்காய் வரத்து குறைந்துள்ளது. நேற்று விற்பனைக்கு வந்த 19.8 டன் ஏலக்காயில் 16.8 டன் விற்பனையானது. நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.1,108 வரை ஏலம் போனது. தோராய விலை கிலோ ஒன்றுக்கு ரூ.929.54 ஆக இருந்தது. கடந்த வாரத்தில் ஏலக்காய் தோராய விலை கிலோ ஒன்றுக்கு ரூ.939.08 ஆக இருந்தது. கடந்த இரு வாரங்களாக பொங்கல் பண்டிகையின் தேவையினால் அதிகரித்திருந்த விலை இந்த வாரம் சீரானது.

ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் 150 டன் வரை விற்பனையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மொத்தமாக 819 டன் ஏலக்காய் விற்பனைக்கு வந்திருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் 789 டன் ஏலக்காய் விற்பனைக்கு வந்திருந்தது. ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் கடந்த வாரம் தோராய விலை கிலோ ஒன்றுக்கு ரூ.962.7 ஆகவும், இந்த வாரம் கிலோ ஒன்றுக்கு ரூ.954ஆகவும் இருந்தது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018