மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

தமிழில் வெளியாகும் ஜாக்கி சானின் புதிய படம்!

தமிழில் வெளியாகும் ஜாக்கி சானின் புதிய படம்!

ஜாக்கி சான் நடிப்பில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியான ‘ப்ளீடிங் ஸ்டீல்’ திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள ஜாக்கி சான் 63 வயதைக் கடந்துவிட்டார். ஆனால் இப்போதும் தனது ஆக்‌ஷன் காட்சிகளைக் குறைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து ரசிகர்களைத் தக்கவைத்துவருகிறார். சைன்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகியுள்ள ப்ளீடிங் ஸ்டீல் படத்திற்காக சிட்னி ஒபரா ஹவுஸின் மேல் தளத்தில் நின்று சண்டைக் காட்சிகளில் அவர் நடித்துள்ளார்.

லியோ சாங் இயக்கியுள்ள இப்படத்தில் ஜாக்கி சானுடன் ஷோலூ, ஓயாங் நானா உள்பட பலர் நடித்துள்ளனர். பெய் பெங் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டோனி சேங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டிசம்பர் மாதம் 22ஆம் தேதி சீனாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழியில் வெளியாகிறது. தமிழில் கே.ஆர்.எஸ்.சினிமா சார்பில் கே.ரவி, எஸ்.பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் சேலம் பி.பாஸ்கர் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 16 ஜன 2018