மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

சட்டப்பேரவையை 90நாட்கள் நடத்த வேண்டும்!

சட்டப்பேரவையை 90நாட்கள் நடத்த வேண்டும்!

சட்டப்பேரவையை 90நாட்கள் நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பித்தது. ஐந்து நாட்கள் நடைபெற்ற நிலையில், கடந்த 12ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைந்தது. சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையும் நிராகரிப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரை 90நாட்கள் நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் நேற்று (ஜனவரி 15) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"மாநில சட்டமன்றங்கள் வருடத்துக்கு 90 நாள்கள் இயங்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தை மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் கமிட்டி கூறியிருக்கிறது. ஆனால், தமிழக சட்டமன்றம் சராசரியாக வருடத்துக்கு 35 நாள்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, இந்த 90 நாள்களாவது சட்டமன்றத்தை இயக்கவேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை. மேலும் மக்கள் பிரச்னை தீர்க்கும் இடமாக சட்டமன்றம் இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,ஆளும் கட்சிக்கு எதிர் வரிசையில் அமர்ந்துள்ள கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகளால் எழும் குழப்பங்கள், கூச்சல்கள் ஒருபுறம் என்றால், ஆளும் கட்சியும் சட்டமன்றத்தை ஆக்கபூர்வமாக நடத்த சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018