சித்ராவுக்கு கேரள அரசு விருது!

கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து வழங்கும் அரிவராசனம் விருதை இந்த ஆண்டு பாடகி சித்ரா பெற்றுள்ளார்.
கடந்த ஞாயிறு (ஜனவரி 14) அன்று விருது வழங்கும் விழா சபரிமலையில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கேரள சட்டமன்ற உறுப்பினர் ராஜூ ஆபிரகாம் தலைமை தாங்கினார். கேரள தேவஸ்தான துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் சபரிமலை உயர் அதிகார குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். சிரிஜகன், தேவஸ்தான தலைவர் பத்மகுமார், உறுப்பினர் சங்கரதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விருதை பெற்றுக்கொண்ட பாடகி சித்ரா, “எனக்கு கிடைத்த அரிவராசனம் விருதை எனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த விருதாக கருதுகிறேன்‘ என்றார்.