மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

மோடி புரட்சிகரமான தலைவர்!

மோடி புரட்சிகரமான தலைவர்!

‘புரட்சிகரமான தலைவராக மோடி இருக்கிறார். அவரால் வருங்காலத்தில் புரட்சிகரமான இந்தியா உருவாகும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு புகழாரம் சூட்டியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஆறு நாள்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இஸ்ரேல் பிரதமருக்கு இந்தியா சார்பாக ராணுவ அணிவகுப்பு மரியாதையும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இஸ்ரேல் சென்ற இந்தியப் பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 15) இருநாட்டு பிரதமர்களும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - இஸ்ரேல் இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதற்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் இஸ்ரேல் சென்றேன். அப்போது 1.25 பில்லியன் இந்தியர்களின் வாழ்த்துகளையும், நட்புறவையும் அங்கு எடுத்துச் சென்றேன். திரும்பி வந்தபோது இஸ்ரேலிய மக்களின் அன்பு, மரியாதையை ஆகியவற்றை பெஞ்சமின் நெதன்யாஹு மூலம் எடுத்து வந்தேன். இருநாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து இருநாட்டு உறவை தூண்களைப் போன்று பலப்படுத்துவோம். விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் விவசாயத்துக்கு இஸ்ரேலிடமிருந்து சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும்” என்றார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 16 ஜன 2018