ரயில்வேப் பொருட்கள் உற்பத்திக்கு புதிய இலக்கு!

ரயில்வேத் துறையின் உற்பத்தியை அடுத்த நான்கு வருடங்களுக்குள் மூன்று மடங்கு உயர்த்த ரயில்வேத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
அனைத்து ரயில்வே மண்டலங்களையும் இணைத்து, அவற்றின் மேலாளர்களுடன் கடந்த மாதத்தில் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அந்தக் கூட்டத்தில் ரயில்வேத் துறையை மேம்படுத்த 2022ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரயில்வே உற்பத்திப் பிரிவின் அனைத்து மேலாளர்களுக்கும் ரயில்வேத் துறையின் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், "ரயில்வேப் பொருட்கள் தயாரிப்பில் உற்பத்தியை அதிகரிக்க உடனடி முயற்சிகளை அனைத்து ஆலைகளும் மேற்கொள்ள வேண்டும். உற்பத்தியை தற்போதைய நிலையிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டியத் தேவை உள்ளது. ஆண்டுக்கு 5000 ரயில் பேட்டிகள் தயாரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 2,435 ரயில் பெட்டிகள் தயார் செய்யப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.