மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

சீனாவுக்கு ஒருநாள்: மோடிக்கு நான்காண்டுகள்!

சீனாவுக்கு ஒருநாள்: மோடிக்கு நான்காண்டுகள்!

‘சீன அரசு ஒருநாளில் என்ன செய்கிறதோ அதை செய்வதற்கு மோடி அரசு நான்காண்டுகள் எடுத்துக்கொள்கிறது’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி முதன்முறையாகத் தனது சொந்த தொகுதியான உத்திரப்பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று (ஜனவரி 15) தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி, “சீனாவுடன் நாம் போட்டியிடுகிறோம். சீனா 24 மணி நேரத்தில் 50,000 வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. ஆனால், இந்தியா 24 மணி நேரத்தில் 450 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. சீன அரசு ஒருநாளில் என்ன செய்கிறதோ, அதைச் செய்வதற்கு மோடி அரசு நான்காண்டுகள் எடுத்துக்கொள்கிறது” என்று மத்திய அரசை விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசுகையில், “குஜராத் மாடல் வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். இருப்பினும் குஜராத் மாநில மக்கள்கூட மாடல் வளர்ச்சி என்றால் என்னவென்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் விவசாயிகளின் நிலம் மற்றும் தண்ணீரைப் பறித்துவிட்டனர். குஜராத் மாடல் என்பது கல்வி மற்றும் விவசாயத் துறைகளைத் தனியார்மயமாக்கியதுதான்” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018