மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

அமலா பால் சரண்!

அமலா பால் சரண்!

அமலா பால் கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் நேற்று (ஜனவரி 15) அவர் கேரள க்ரைம் பிராஞ்சு முன் சரணடைந்தார்.

அமலா பால் ஒரு கோடி ரூபாய்க்கு, மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கியுள்ளார். இந்தக் காரை கேரளாவில் பதிவுசெய்ய 20 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். எனவே, இந்தத் தொகையை தவிர்க்க புதுச்சேரியில் வேறு ஒரு நபரின் பெயரில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தனது காரை அமலா பால் பதிவு செய்துள்ளார். இந்த வரி ஏய்ப்பால் கேரள அரசுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் எற்பட்டுள்ளதாக கேரள வரித் துறை கூறியுள்ளது.

இந்த நிலையில், நேற்று கேரள க்ரைம் பிராஞ்சு முன் அமலா பால் சரணடைந்தார். அவரிடம் க்ரைம் பிராஞ்சு ஐஜி எஸ்.ஸ்ரீஜித் விசாரணை நடத்தி வருகிறார். அமலா பால் மீது சட்டப்பிரிவுகள் 420, 468, 471 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அமலா பால் முன் ஜாமீனுடன் ஆஜரானார். அவர் வருவதை அறிந்து அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்த நிலையில், யாரிடமும் பேசாமல் அவர் உள்ளே சென்றுவிட்டார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018