மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!


சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தரும் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும்விதமாக ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலத்தின் புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியின் அரங்கு எண் 379இல் இடம்பெற்றுள்ளன. மனம் என்னும் மாயக்கண்ணாடி, பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் எழுதிய இந்தியப் பொருளாதாரம் கட்டுக்கதைகள், சாரு நிவேதிதா எழுதிய நாடோடியின் நாட்குறிப்புகள் ஆகிய புத்தகங்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று அதிகளவில் நேற்று விற்பனையாகியுள்ளன.
இங்கு வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக நடத்தப்படும் ஸ்மார்ட்போன் பரிசு திட்டத்தில் பங்குபெற வாசகர்கள் மின்னம்பலம் அரங்குக்கு வருகை தருவதே போதுமானது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.