மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

டாஸ்மாக்: கட்டுப்பாடுகள் தளர்வு!

டாஸ்மாக்: கட்டுப்பாடுகள் தளர்வு!

டாஸ்மாக் தொடர்பாகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நகராட்சி, மாநகராட்சி வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று சமூகநீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தமிழகத்தில் மொத்தமுள்ள 5,672 மதுக்கடைகளில் நெடுஞ்சாலைகளிலுள்ள 3,321 மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன.

ஆனால், சண்டிகர் வழக்கின் தீர்ப்பையடுத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பாக நீதிமன்றம் குறிப்பிட்ட வரைமுறைகளைத் தெளிவுபடுத்துமாறும் கூறப்பட்டிருந்தது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018