மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

நாதுராமுக்கு மூன்று நாள்கள் போலீஸ் காவல்!

நாதுராமுக்கு மூன்று நாள்கள் போலீஸ் காவல்!

கொள்ளையன் நாதுராமை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை, கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த நாதுராம் மற்றும் அவனது கூட்டாளியை குஜராத்தில் வைத்து ராஜஸ்தான் போலீஸார் இரு தினங்களுக்கு முன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் ராஜஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபடாமல் இருப்பதற்காக நாதுராம் தனது இருப்பிடத்தை 33 முறை மாற்றியது தெரியவந்தது.

இந்த நிலையில், நாதுராம் மற்றும் அவனது கூட்டாளியை பாலி மாவட்டத்தில் உள்ள ஜேத்தரான் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஜனவரி 15 ஆஜர்படுத்தினர். நாதுராமைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரிய நிலையில் மூன்று நாள்கள் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 18ஆம் தேதி அவனை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டுத் திருடப்பட்ட இந்த வழக்கில் நான்கு வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். நாதுராம் மற்றும் அவனது கூட்டாளி தினேஷ் சௌத்ரி ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராஜஸ்தான் சென்றது.

டிசம்பர் 13ஆம் தேதி கொள்ளையர்களை நெருங்கும்போது ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். முதலில் இந்தக் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தான் சுட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பின்பு, பெரியபாண்டியின் உடலில் பாய்ந்த குண்டு உடன் சென்றிருந்த ஆய்வாளர் முனிசேகருடையது என்று ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்ட எஸ்பி தீபக் பார்கவ் கூறியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முனிசேகர், பெரியபாண்டியனின் குடும்பத்தாரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டார். எனினும் பெரியபாண்டியன் மரணம் தொடர்பான மர்மம் இன்னும் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, துப்பாக்கியுடன் நாதுராம் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படங்களை அவனே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நாதுராமைப் பிடிக்க வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர் மற்றும் தலைமை காவலர் அந்தஸ்தில் உள்ள திறமை வாய்ந்த போலீஸார் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது. கொள்ளையன் நாதுராமை போலீஸார் ராஜஸ்தானில் தேடி ந்த நிலையில் நாதுராம் குஜராத்துக்குத் தப்பிச்சென்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018