மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

பேட்டிங்கால் பதில் சொன்ன கோலி

பேட்டிங்கால் பதில் சொன்ன கோலி

தன்மேல் வைக்கப்பட்ட விமர்சனத்துக்குத் தனது பேட்டிங்கால் பதில் கூறியுள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அஸ்வினின் அபார பந்து வீச்சால் 335 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கத் தொடக்க வீரர் மார்கிராம் 94 ரன்களும், ஹசிம் அம்லா 82 ரன்களும், கேப்டன் டு பிளிசிஸ் 63 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முரளி விஜய் (46), விராட் கோலியின் (85 அவுட் இல்லை) சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 85 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா மேலும் 4 ரன்கள் எடுத்து 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

விராட் கோலி 146 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது அவரின் 21ஆவது சதமாகும். தொடர்ந்து விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அஸ்வின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 280 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 38 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் வந்த சமி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒன்பதாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இசாந்த் சர்மா ஜோடி சேர்ந்தார். இசாந்த் சர்மாவை ஒருபுறம் வைத்துக்கொண்டு விராட் கோலி 150 ரன்னைக் கடந்தார். இசாந்த் சர்மா 3 ரன்னில் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக 153 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழக்க இந்தியா 92.1 ஓவரில் 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முதல் போட்டியின்போது இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. அப்போது இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. முன்னாள் வீரர் சேவாக் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறவில்லையெனில் கோலி பதவி விலக வேண்டும் எனக் கூறினார். முதல் போட்டியில் தனது விக்கெட்டை விரைவில் பறிகொடுத்த கோலி, இரண்டாவது போட்டியில் தனி ஒருவனாக நிலைத்து நின்று அணியைக் கௌரவமான ஸ்கோர் பெற உதவியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 16 ஜன 2018