மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

ஆரோக்கியத்...தை

நலத்...தை

வளத்...தை

சாந்தத்...தை

சமத்துவத்...தை

நட்பில் இறுக்கத்...தை

பந்தத்...தை

பாசத்...தை

நேசத்...தை

இரக்கத்...தை

உற்சாகத்...தை

ஊக்கத்...தை

ஏற்றத்....தை

சுபிட்சத்...தை

கொடுத்து...

பஞ்சத்...தை

வஞ்சத்...தை

வன்மத்...தை

துரோகத்...தை

அலட்சியத்...தை

அகங்காரத்...தை

ஆணவத்...தை

கோபத்...தை

குரோதத்...தை

சுயநலத்...தை

எடுத்து...

எல்லோரும் இறையருளால் இனிதாய் வாழ வாழ்த்தும்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

இது வழக்கமா வருஷா வருஷம் நடக்கறது. தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மெசேஜ் எல்லாம் காணும் பொங்கல் அன்னிக்கு அனுப்பறீங்க. சரி... ஏதோ ஒரு லாஜிக்கா ஒப்புக்கலாம். சில மாநிலங்கள்ல மாற்றியும் கொண்டாடுவாங்க. ஆனா, காணும் பொங்கலுக்குப் போகி மெசேஜ்லாம் அனுப்பறதெல்லாம் என்னய்யா நியாயம்?

துயர் போ(க்)கி,

கஷ்டம் போ(க்)கி,

அல்லல் போ(க்)கி,

நோய் போ(க்)கி,

மனத்தாங்கல் போ(க்)கி,

வறுமை போ(க்)கி,

பசி போ(க்)கி,

பஞ்சம் போ(க்)கி,

வறட்சி போ(க்)கி,

பொறாமை போ(க்)கி,

வஞ்சம் போ(க்)கி,

அறியாமை போ(க்)கி,

இல்லாமை போ(க்)கி,

மாயை போ(க்)கி,

ஏழ்மை போ(க்)கி,

பயம் போ(க்)கி,

கல்லாமை போ(க்)கி,

இருள் போ(க்)கி,

பொங்கட்டும்

தமிழ் பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

எப்படி முடிச்சார் பார்த்தீங்களா? அதான் டெக்னிக்கு.

அடுத்ததா இன்னொரு வீடியோ பரவிகிட்டு இருக்கு,

“இதுதான் சுரகப் பறவை. இதன் விலை ரூபாய் 25 லட்சம். 19 புகைப்பட கலைஞர்கள் 62 விலை மதிப்பில்லா நாள்களைச் செலவழித்து இந்த வீடியோவை எடுக்க முடிந்தது. கண்டிப்பா பார்க்க வேண்டிய காணொளி. தவறாம ஷேர் பண்ணிடுங்க.”

அரை நிமிட வீடியோவுக்கு எதுக்கு 62 நாள்கள்?

அப்படி ஒரு பறவை இருக்கா... இல்லையான்னே கேள்விப்படாம வந்ததையெல்லாம் ஃபார்வேர்டு பண்றாங்க.

சரி, ஏதோ பித்தலாட்டம், கோல்மால் வேலை அப்படின்னாகூட, “இங்கே அணுகவும், இந்த முகவரி, இங்கே வந்தால் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பறவை கிடைக்கும்’னா போன் நம்பர், அட்ரஸ் போடணுமா, இல்லையா?

எல்லாருக்கும் ஷேர் பண்ணி என்ன ஆகப்போகுது. யோசிக்கவே மாட்டாங்க நம் மக்கள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 16 ஜன 2018